திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளம் நெம்மேலி அண்ணா நகர் தெருவில் கணேசன் (35) என்பவர் வசித்து வந்தார். இவர் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காளாஞ்சிமேடு பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் புளிய மரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.