தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை சுற்றுலா தளமாகவும், காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அணையாகவும் விளங்கி வருகிறது. இந்த கல்லணைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அந்த வகையில் இந்த வருட புத்தாண்டு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை அமைந்ததால் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்தனர்.

கல்லணையில் உள்ள கரிகாலன் பூங்கா, சிறுவர் பூங்கா, கரிகாலன் மண்டபம் போன்ற அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனை தொடர்ந்து மக்கள் கூட்டம் வந்ததால் காவிரி பாலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார்  போக்குவரத்து நெரிசலை சீரமைத்துள்ளனர்.