கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரள்வாய்மொழி மீனாட்சிபுரத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் அப்பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த ஆட்டோ அவர் மீது மோதியது.

இதனால் படுகாயமடைந்த பெருமாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுனர் ரவி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.