பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் வீடு வாங்குவதற்காகச் சென்ற கணவன்-மனைவி மீது வளர்ப்புப் பிட்புல் நாய் திடீரெனப் பாய்ந்து கோரமாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாட்டியாலாவில் புதிய சொத்து ஒன்றைப் பார்வையிடுவதற்காகத் தம்பதியினர் ரியல் எஸ்டேட் முகவருடன் குறிப்பிட்ட அந்த வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீட்டின் அழைப்பு மணி அடித்து உள்ளே நுழைவதற்காகக் காத்திருந்தபோது, அங்கிருந்த வீட்டின் உரிமையாளருக்குச் சொந்தமான ஆக்ரோஷமான பிட்புல் நாய் திடீரென வாசல் கதவைத் தாண்டி வெளியே பாய்ந்து அவர்களைக் கடித்துக் குதறியது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து மக்கள் போராடி நாயை விலக்கித் தம்பதியைக் காப்பாற்றினர். அதற்குள் உடலில் பல இடங்களில் நாய் கடித்ததால் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன் மற்றும் மனைவி உடனடியாக மீட்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Patiala, Punjab – A couple was attacked by a pitbull dog in Patiala while they were visiting a property with a real estate dealer. The husband and wife had gone to inspect a house for purchase. When they rang the doorbell, a pitbull inside the premises suddenly lunged at them.… pic.twitter.com/FEP3VVyKoU
— NextMinute News (@nextminutenews7) August 12, 2026
“>
ஆபத்தான நாய் இனங்களின் வளர்ப்பும், அவற்றின் முறையற்ற பராமரிப்பும் பொதுமக்கள் மத்தியில் தொடர் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
