தேனி மாவட்டத்தில் பாபு (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஜெயபாரதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் பாபு மற்றும் சென்னையில் தங்கை வேலை பார்த்து வந்த நிலையில் அவருடைய குடும்பத்தினர் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளனர். இதில் பாபு மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில் கடந்த ‌3 மாதங்களுக்கு முன்பாக பாபுவுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே குடும்பத்தகறாறு ஏற்பட்டதால் அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். அவர் தன் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவர் பொன்னன் படுக்கைக்கு வந்துள்ளார். அப்போது மஞ்சள் காமாலை நோயினால் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் நோய் பாதிப்பு மற்றும் மனைவி பிரிந்து சென்ற துக்கம் போன்றவற்றால் மிகுந்த மனவேதனையில் அவர் தவித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை அவருடைய வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாபு தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.