பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற எங்களது கோரிக்கைகளை தமிழக நிதி அமைச்சர் புறக்கணித்து வருகிறார். பிப்ரவரி 12 ஆர்ப்பாட்டத்திற்கு பின் மார்ச் 5-ல் உண்ணாவிரத போராட்டம், மார்ச் 24 -ல் மனித சங்கிலி போராட்டம் நடக்கும் என கூறியுள்ளனர்.