திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும் நிலையில், பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயிலின் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22621), வருகிற 8-ந் தேதி கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22622) இரு மார்க்கங்களிலும் மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும்.