வங்கியில் கணக்கை வைத்திருப்பவர்கள் பேன் மற்றும் ஆதார் தொடர்பான பல ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் KYC அப்டேட்டை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது வங்கி கணக்கு செயல்படாது என்று மத்திய அரசு தெளிவு படுத்தி உள்ளது. உங்களது அக்கவுண்டில் இருந்து பண பரிமாற்றமும் செய்ய இயலாது எனவும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பான் மற்றும் ஆதார் கேஒய்சி புதுப்பிக்கப்பட்ட பிறகு தான் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.