ஆந்திர மாநிலத்தில் தம்பதியினர் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மீண்டும் கணவர்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது மனைவி கணவரின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். தற்போது இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருக்கின்றனர். இவ்வாறு குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியதில் இருவரும் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.