தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் அழகு பாண்டி (51) -கூரியம்மாள் (46) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அழகு பாண்டி லாரி ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் மகளுக்கு திருமணமான நிலையில் மகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்அழகு பாண்டி  மற்றும் கூரியம்மாள் இடையே குடும்பத் தகறாறு காரணமாக அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அழகு பாண்டி  தன் மனைவியை கம்பால் அடித்து கொன்றார்.

அதன்பிறகு ஒரு சேலையால் என்னுடைய மனைவியின் கழுத்தை இறுக்கி மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். அதன் பிறகு அவர்  அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அழகு பாண்டியை  தீவிரமாக தேடிய நிலையில் தன்னை தேடுவதை தெரிந்து கொண்ட அவர் தானே சென்று விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.