SBI வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து 147.50 பிடித்தம் செய்திருக்கிறது. டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு சேவைக் கட்டணம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெபிட் கார்டு சேவைக் கட்டணமாக 125 ரூபாயை வசூலிக்கிறது எஸ்.பி.ஐ. அதோடு ஜிஎஸ்டி சேர்த்து 147.50 பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது. பரிவர்த்தனை செய்யாமல் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செய்திகள் வருவதால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும், இருப்புப் பராமரிப்பு/சேவைக் கட்டணம் என்ற பெயரில் ரூ.147.50 டெபிட் செய்யப்படும் என்றும் வங்கித் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். பணம் எடுக்கும் வரம்பை மீறினாலும் ஏடிஎம்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.