ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இங்கு இதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்கள் வந்துள்ளனர்.  இவர்கள் எக்கோ கார்டியோகிராம் சிகிச்சை மேற்கொள்ள வந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த டாக்டர் ஒருவர், 2 இளம் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த 12ம் தேதி அந்த 2 பெண்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மருத்துவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் அந்த டாக்டரை தாக்கியுள்ளனர். ஆனால் அதுகுறித்து எந்த ஒரு புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார்.