நடைபெற உள்ள தேர்தலில் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஈடுபாடு பல மடங்கு இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அஞ்சாமல், அயராமல், துவளாமல் வெற்றியை இலக்காகக் கொண்டு பணிகளை தொடர வேண்டும். தேர்தல் களம் நமக்கு சாதகமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். வெற்றியை சிந்தாமல், சிதறாமல் வாக்குகளாக மாற்ற உற்சாகத்துடன் பணியாற்றுங்கள் என உத்தரவிட்டுள்ளார்