ஹரியானாவில் ஒரு முதியவரும் அவரது பேரனும் இணைந்து, தங்கள் பகுதியில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து ஆற்றில் வீசுவதாக ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளை வதைக்கும் இந்த கொடூரமான செயல், சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

“>

இந்தச் சம்பவத்திற்கு இணையவாசிகள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “இது மிகவும் கொடூரமானது” என்று பதிவிட்டுள்ள பயனர்கள், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

மேலும், இந்த வீடியோவை பார்த்த பலர் ஹரியானா காவல்துறையை சமூக ஊடகத்தில் டேக் செய்து, மனிதநேயமற்ற முறையில் நடந்துகொண்ட அந்த முதியவர் மற்றும் அவரது பேரன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.