தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தென்கரைக்கோட்டை கிராமத்தில் சிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்த நித்திஷ்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனால் பதறிய குடும்பத்தினர் உடனடியாக நித்திஷ் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் நித்திஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.