திருவண்ணாமலையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நித்தியானந்தா. தன்னை சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்தியானந்தா பல இடங்களில் ஆசிரமங்களை திறந்தார். இவர் நடிகை ஒருவருடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து நித்தியானந்தாவின் ஆசிரமங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவர் செய்த பல தில்லுமுல்லு வேலைகள் தெரியவந்தது. நித்தியானந்தா மீது பல்வேறு பாலியல் புகார்கள் இருக்கும் நிலையில் தற்போது தேடப்படும் ஒரு குற்றவாளியாக அவர் இருக்கிறார். இந்நிலையில் நித்தியானந்தா கைலாசா  என்ற தனித்தீவில் வசித்து வருவதோடு சில பெண்களையும் அங்கு வைத்து இருக்கிறார். இவர்களின் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை மீட்டு தருமாறு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்று ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பசிபிக் பெருங்கடலில் உள்ள கோஸ்டா ரிகா தீவுகளில் ஒன்றுதான் கைலாசா தீவு என்று சொல்லப்படுகிறது. நித்தியானந்தா பல நாடுகளில் சில கோவில்களை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அந்த கோவில்கள் மூலம் வருமானம் ஈட்ட முடிவு செய்துள்ளதோடு, இன்னும் பல நகரங்களில் தன்னுடைய ஆசிரமங்களை திறப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் புது தகவல்கள் வெளிவந்துள்ளது. கைலாசவில் வசிக்கும் தன்னுடைய குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன் கைலாசவுக்கு வரும் பக்தர்களை வரவேற்பதற்காக கதவுகள் எந்நேரமும் திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த திட்டங்களின் மூலம் பெரிய அளவில் வருமானம் ஈட்டுவதற்கு நித்தியானந்தா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.