நாட்டின் முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியுள்ளது.  அதன்படி தற்போது பொதுத்துறை வங்கியான SBI விளிம்புநிலை நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களை (MCLR) விகிதத்தை 10 புள்ளிகள் உயர்த்தி உள்ளது. 7.85% தற்போது 10 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 7.95 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 1 முதல்  3 மாதங்களுக்கான MCLR விகிதம் 8.10 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்தாக 6 மாத MCLR 8.30 சதவீதத்திலிருந்து 8.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு வருடத்திற்கான MCLR வட்டி விகிதம் 8.50% ஆகவும், 2 ஆண்டுகளுக்கான MCLR 8.60% ஆகவும், 3 ஆண்டுகளுக்கான MCLR 8.70 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள MCLR விகிதம் இன்று முதல் (பிப். 15) அமலுக்கு வருவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ-யின் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக் கடன் என பல வகை கடன்களுக்கான வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேசனல் பேங்க் வங்கிகள் கடன் வட்டியை உயர்த்தின.