கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதாவது “பிரதமர் மோடியே வந்தாலும் எதுவும் நடக்காது என்று நாங்கள் சொன்னது போலவே நடந்துள்ளது. 120 இடங்களில் முன்னிலை வகிக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மையை பெறுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.