பாட்னாவில் மதசார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ள நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொள்கை வலியும் இயக்க உணர்வும் பெருகிட திருவாரூர் திருத்தளத்தில் கலைஞர் 100 நிகழ்வுகளை தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பாட்னா நகருக்கு புறப்பட ஆயத்தமாகிவிட்டேன்.

காலமெல்லாம் அதன் நல்லிணக்க கொள்கையை வலியுறுத்திய நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன்”நன்றி தெரிவித்த நம்பிக்கையுடன் புறப்படுகிறேன் என்று அறிக்கை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.