இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாக இருக்கும் அதன் பிறகு முழுமையாக அரசியலில் இறங்க தயாராக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. என்னுடைய கொள்கை வேறு, அவருடைய கொள்கை வேறு, அதில் சமரசம் இல்லை, என்னுடைய கருத்துக்கு வலு சேர்ப்பது போல விஜய் பேசியுள்ளார், அதனை வரவேற்கலாம் என சீமான் தெரிவித்துள்ளார்.