தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக SBI துணைப் பொது மேலாளர் எம்.கண்ணா பாபு கூறிய போது, “இந்தத் தகவலை வெளியிடுவது 3ஆம் தரப்பினரின் போட்டி நிலைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆர்டிஐ சட்டப் பிரிவு 8(1) (D)-இன் கீழ் பொது வெளியில் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்