சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க, விற்க, வெடிக்க அனுமதி என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பேரியம் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கவும், அதேபோல சரவெடி வெடிக்கவும் அனுமதி கோரிய மனுவை ஏற்க முடியாது

இந்த இரண்டுக்குமான தடை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பட்டாசு வெடிப்பதற்கான நேர வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், டெல்லியில் பட்டாசு விற்க, வெடிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும்.