தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சமீபத்தில் நாட்டில் உள்ள டிவி சேனல்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக இந்தியாவில் சில அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடும் குற்ற வழக்குகளை கொண்டுள்ள நபரை வெளிநாட்டில் தொலைக்காட்சி விவாதத்துக்கு அழைக்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. அரசு பத்திரிகை சுதந்திரத்தை மதிக்கிறது.

இருப்பினும் தொலைக்காட்சி சேனல்கள் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இதனால் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்தோர், சீரியஸான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை டிவி சேனல்களில் பேச வாய்ப்பு வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.