பிரபல பரதநாட்டிய கலைஞரான சரோஜா வைத்தியநாதன் டெல்லியில்  உள்ள அவருடைய வீட்டில் நேற்று காலமானார். உடல்நல குறைவு காரணமாக காலை நான்கு மணி அளவில் காலமானதாக அவருடைய மருமகளும் பரதநாட்டிய கலைஞருமான ரமா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார் .பரதநாட்டியம் மற்றும் கர்நாடக சங்கீதத்தில் இவருடைய பங்களிப்புகள் அளப்பரியது. இவருக்கு கடந்த 2002ல் பத்மஸ்ரீமற்றும்  2013 பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன . இந்த நிலையில் இவருடைய மறைவுக்கு மத்திய கலாச்சார துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.