வங்கி கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருப்பவர்கள் யார்? என்பது தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்க ஆர்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி அனைத்து கடன்களையும் சேர்த்து 25 லட்சம் மற்றும் அதற்கு மேல் கடன் நிலுவை தொகை இருந்து அதை திருப்பி செலுத்தும் நிலையில் பணத்தைச் செலுத்தாமல் இருந்தால் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் இருந்ததாக அறிவிக்கப்படுவார்கள். மேலும் கடன் வழங்கும் வங்கிகள் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள் என்று அறிவிப்பை எப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியிடும் என்பது தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் தெளிவாக விளக்க வேண்டும் எனவும் ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது.

ஒருவர் பெற்ற கடன் வாரா கடனாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களில் இருந்து அவர் வேண்டுமென்றே கடனை செலுத்தாமல் இருந்தாரா என்பது அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்படும் நபர் மீண்டும் கடன் வாங்க முடியாது. சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுடைய சொத்துக்களில் இருந்து வங்கிகள் தங்களுடைய கடனை  திரும்ப வசூலிக்க முடியும் என்று ஆர்பிஐ வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.