மத்திய அரசின் பிஎம் கிஷன் திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆதரவுடன் கூடிய உரையாடல் அமைப்பை மத்திய வேளாண் துறை இணைய அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டமான இந்த திட்டம் செயற்கை நுண்ணறிவு உரையாடல் உதவி அமைப்பை மத்திய வேளாண் அமைச்சகம் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு  சாட்பட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பிஎம் கிஷன் திட்டத்தின் செயல் திறனை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு சார்ட் பாட் அம்சத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப விவசாயிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாகத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார். மேலும் பி.எம். கிசான் திட்டம் தொடர்பான தகவல்களை அனுப்புவதற்கும் குறைகளை தீர்ப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் உதவும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்தச் சாட்பாட் சேவை ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி ஆகிய மொழிகளின் கிடைக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.