தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு பலரின் பெயர்கள் தட்டுப்படுகிறது.

அந்த வகையில் நடிகை திரிஷா, ஐஸ்வர்யா ராய், காஜல் அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், நடிகை சாய் பல்லவியை தான் அஜித் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் தற்போது 2 ஹீரோயின்கள் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகை திஷா பதானி ஆகியோரிடம்‌ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். ஏகே 62 திரைப்படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உண்மை தகவல் தெரிய வரும். மேலும் ஏகே 62 திரைப்படத்தில் பல ஹீரோயின்கள் பெயர் தட்டுப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் யார் தான் ஹீரோயினாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.