பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித் நடித்த “துணிவு” மற்றும் தளபதி விஜய் நடித்த “வாரிசு” ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. ஒரே நாளில் 2 உச்சநட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியானதால் அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். இதற்கிடையில் பொங்கல் விடுமுறையும் முடிவுக்கு வந்து விட்டதால் வரரிசு, துணிவு ஆகிய படங்களின் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை நாம் தெரிந்துக்கொள்வோம்.

சென்ற 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த 2 படங்களுமே வசூலை அள்ளிக் குவித்துள்ளது. தளபதியின் வாரிசு படம் 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்தது. அதன்பின் அடுத்த சிலமணி நேரங்களிலேயே அஜித்தின் துணிவு 5 நாட்களில் 175 கோடி கலெக்ஷன் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியது.

முதல் 7 நாட்கள் முடிவில் துணிவு படம் 200 கோடி வசூலை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஒரே வாரத்தில் துணிவு படத்திற்கு கிடைத்திருக்கும் இந்த வசூலானது அஜித் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு பொங்கல் விருந்தளித்துள்ளது. தமிழக பாக்ஸ் ஆபிஸில் துணிவு முதல்நாளில் 25 கோடி ரூபாயும், 2-வது நாளில் 14 கோடியும் வசூலித்தது.

அடுத்தடுத்த நாட்களிலும் சீரான வசூலை வாரி குவித்த துணிவு, இதுவரையிலும் 96 கோடியை கடந்து உள்ளது. அந்த வகையில் துணிவு படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் கலெக்ஷனை கடந்து உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியாகிய  அஜித்தின் திரைப்படங்களில், துணிவுதான் வசூலில் சிறப்பான சம்பவம் செய்து உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.