புதுக்கோட்டையில் முடியை வெட்டி வரச் சொல்லி ஆசிரியரால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தலைமுடிக்காக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.