கடந்த 2006-ஆம் வருடம் வெளியாகிய சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். படம் இயக்குவது மட்டுமின்றி நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தில் மிஷ்கின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னயில் நடந்த டைனோசர்ஸ் பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின், தம் அடிக்கும் இயக்குனர்கள் கண்டிப்பாக வெற்றி இயக்குனர்களாக வலம் வருவார்கள் என கூறினார். மேலும் நான் அடுத்த படம் எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் திரைப்படத்தில் நாளொன்றுக்கு 100 சிகரெட் புகைத்தேன். அதன்பின் அஞ்சாதே திரைப்படத்திற்கு சிகரெட் எண்ணிக்கை 120 ஆனது” என்று அவர் கூறினார்.