தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஸ்தூரி. இவர் அடிக்கடி அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருவார். அந்த வகையில் தற்போது பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்த தன் கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது முன்னதாக அமைச்சர் பிடிஆர் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் மற்றும் மகன் 30,000 கோடி சம்பாதித்துள்ளனர் என்று பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. தற்போது 57 நொடிகள் கொண்ட அந்த ஆடியோவில் அமைச்சர் பிடிஆர் திமுக கட்சியை விமர்சிப்பது போன்று அமைந்துள்ளது.
ஆனால் அமைச்சர் அது தன்னுடைய குரல் என்றும் இது போன்ற தகவல்களுக்கு நான் புகார் கொடுக்க விரும்பவில்லை எனவும் விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஒரு முழு உரையாடலையும் உருவாக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதா.? சரி பார்க்காமல் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் அதை பகிர்வாரா.? இது அமைச்சர் பிடிஆர் மற்றும் திமுகவுக்கு நல்லதல்ல என்று பதிவிட்டுள்ளார். மேலும் அமைச்சர் பேசியது உண்மை என்றால் திமுகவுக்கு பிரச்சனை வரும் என்றும், ஒருவேளை திமுகவை பற்றி உண்மைக்கு புறம்பாக பேசியிருந்தால் பிரச்சனை அமைச்சருக்கு தான் என்ற கருத்தை தான் நடிகை கஸ்தூரி மறைமுகமாக தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.