மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாததால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்த  போராட்டம்  நடத்தப்படும் என்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சிறு, குறுந்தொழில் சங்கத்தினர் கூறியதாவது; மின்கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதுகுறித்து அரசிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.

மின்கட்டணம் அடிக்கடி உயர்த்தப்படுவதால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. மின்கட்டண முறைகளை மாற்றி அமைத்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.