அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் நடக்கும் இக்கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைக்கவும் முடிவு செய்யப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான மோதல் போக்கால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.