நெல்லை மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் 650 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து விடும். இந்த நெல்லை மற்றும் சென்னை வந்தே பாரத் ரயிலில் ஏழு சேர் கார் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு எக்ஸிக்யூட்டிவ் பெட்டி என மொத்தம் எட்டு பெட்டிகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்போன் சார்ஜிங் வசதி, யூஎஸ்பி போர்ட், உணவு டிரே, பார்வையற்றவர்களின் வசதிக்காக ப்ரைலி அறிவிப்பு பலகை என பல வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.