கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக் கடன் உச்சவரம்பு 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். நெல், திணை மற்றும் சாமை உள்ளிட்ட தானியங்களை வைத்து கடன் பெறலாம் என்றும் தானியங்களின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை, 10 – 11.75% வட்டியில் பெறலாம் எனவும் கூறியுள்ளார். இந்த கடனை ஓராண்டு தவணையில் அல்லது மொத்தமாக திருப்பி செலுத்தலாம் எனவும் அவர் கூறினார்.