தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 27 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

தனியார் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிகளின் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் ஒன்பதாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.