கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஈரோடு மற்றும் திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நாளை முதல் 18ஆம் தேதி வரை சேவல் சண்டை நடந்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த வேண்டும். சேவல்களை துன்புறுத்த கூடாது; மதுகொடுக்க கூடாது; காலில் கத்தி கட்டக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.