தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்கலாம் என ஆளுநர் பேசியது சர்ச்சையாது. அதனைத் தொடர்ந்து அரசும் கடும் எதிர்வினைகளை பதிவு செய்தது. அதன்பின் சட்டப்பேரவையை ஆளுநர் புறக்கணித்து சென்றது எல்லாம் நாம் அறிந்ததே. இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் பொங்கல் செய்தியில் தமிழ்நாடு என்றே குறிப்பிட்டிருக்கிறார். “தமிழ்நாடு ஆளுநர்” எனக் குறிப்பிட்டு ஆளுநர் ரவி மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். டெல்லிக்கு சென்று வந்த பிறகு அவரது நடவடிக்கையில் மாற்றம் தென்படுகிறது என்று கூறப்படுகிறது.