புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

புதுக்கோட்டை இறையூர் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 26ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெறுகிறது என்றும், விசாரணையை தீவிரபடுத்தவும் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ஏற்கனவே உறுதி கொடுத்திருந்தார். இந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக 70 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.