தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாம் மகளிர் திட்ட அலுவலகம் மூன்றாவது குறுக்கு தெரு சீதாராமன் நகர், புதுப்பாளையம் பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஊரக மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் பத்தாம் வகுப்பு முதல் ஐடியை மற்றும் பட்டப்படிப்பு உள்ளிட்ட அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.