ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கங்கை அம்மன் கோவில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு சேட்டு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கனமழையால் ஈரமாக இருந்த வீட்டு சுவர் இடிந்து விழுந்தது.

இதனால் படுகாயமடைந்த சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சேட்டுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.