தமிழகத்தில் ரயிலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த நபர் தொழிலாளர்களிடம் தமிழில் சில கேள்விகளை கேட்பது போலவும் அவர்கள் பதிலளிக்காத போது அவர்களை தாக்குவதும் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குற்ற வழக்கில் ரயில்வே காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் இவரை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ரயில்வே காவல்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.