சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் 15 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையானது இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்க பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மெட்ரோ ரயிலுக்கும் அதிக முக்கியத்துவம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் தற்போது மெட்ரோ ரயில் சேவையானது உள்ளது.

சென்னை மெட்ரோ லிமிடெட் (CMRL) சிவப்பு வழித்தடம், பச்சை வழித்தடம் என 2 வழித்தடங்களில் மெட்ரோ சேவையை வழங்கிவருகிறது. இப்போது இந்த சேவையை நீட்டிக்கும் பணிகளும் நகர் முழுவதும் நடந்து வருகின்றன. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டமாக 3 வழித்தடங்கள் உருவாகப்பட உள்ளது. இந்நிலையில், சென்னையை அடுத்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.