மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில், “டிவி பார்க்க கூடாது, அக்கம் பக்கத்தினருடன் பேச கூடாது, கோவிலுக்கு தனியாக செல்ல வேண்டும், கம்பளத்தில் உறங்க கூடாது என்பதெல்லாம் கொடுமைகளுக்கு கீழ் வராது என்று தெரிவித்தது. இந்த வழக்கின் பின்னணி 2003 ஆம் ஆண்டில் தொடங்கியது.  திருமணமான ஒரு பெண், தனது கணவர் மற்றும் மாமியாரின் கொடுமைகளால் 6 மாதத்திலேயே தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண்ணின் பெற்றோர் கூறியதாவது  “நள்ளிரவில் தண்ணீர் எடுத்து வர கட்டாயப்படுத்தியுள்ளனர். சாப்பாடு கேலி செய்யப்பட்டது. பக்கத்தினருடன் பேச கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தனர்.” இத்தகைய முறைகளால் தங்களது மகள் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்தனர்.

நீதிபதிகள் இதன் தொடர்பான புகாரை விசாரித்தபோது, நள்ளிரவில் தண்ணீர் சப்ளை கிடைக்கும் கிராமப் பகுதியின் நிலைமையைப் புரிந்து, அதனை தவறாகக் கருத முடியாது என்று தீர்மானித்தனர். மேலும், பெண்ணின் குடும்பம் கூறிய நிலைகளை கொடுமையாகக் கருத இயலாது என்றும் தீர்ப்பு வழங்கினர். இது தொடர்பான தீர்ப்பின் அடிப்படையில், குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் விடுதலை செய்யப்பட்டனர்.