அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா‌ பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு செல்லப் பிராணியாக நாயை வளர்த்து வருகிறார்கள். இந்த நாய் செல்போனை கடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அதில் லித்தியம் அயன் பேட்டரி இருந்தது. அப்போது திடீரென அந்த பேட்டரி வெடித்து சிதறி வீடு முழுவதும் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் செல்போனை  ‌ குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளின் கைப்படாதவாறு வைக்க வேண்டும் என தேசிய தீ பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. அதோடு சார்ஜ் முழுமையாக ஏறியவுடன் செல்போனை அணைத்து வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செல்போன் வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.