சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வியில்  பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 23 வெளியாகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியில் முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ஜூன் மாதம் நடைபெற்ற எம்சிஏ, எம் எஸ் சி தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.