சென்னையில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளுவர் நாள் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி , குடியரசு நாள் ஜனவரி 26 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003 கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் வருகின்ற ஜனவரி 16 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதனைப் போலவே கிளப்புகளை சார்ந்த பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள்மற்றும் இதர பார்கள் என அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் எனவும் இந்த இரண்டு நாட்களில்மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின் படி நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.