சென்னை மாமல்லபுரத்தில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நாளை முதல் 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கையில், மகாபலிபுரத்தில் ஜூன் 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த ஜி 20 மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.