சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் மெட்ரோ நிலையம் ஆகிய பகுதிகளில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சேத்துப்பட்டு இருந்து ஜெமினி பாலம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு, உத்தமர் காந்தி சாலை வழியாக செல்லலாம். ஜெமினி படத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை மற்றும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைந்தகரை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் டேங்க் ஃபண்டு சாலையில் திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக செல்லலாம்.