நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக மின்னணு, பிளாஸ்டிக் உள்ளிட்ட 35 பொருட்கள் விலை கணிசமாக உயரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி நாட்டில் உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், நகைகள் ஆகியவற்றின் விலையை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள் ஆகியவற்றின் விலையை உயர்த்தவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.